எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி: தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் கடனுடன் கூடிய மானிய உதவியின் மூலம் 2 லட்சம் சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்கப்படும் / மேம்படுத்தப்படும் என மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கூறியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
மத்திய அரசு திட்டமான பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ், இந்த நிதி நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தையும், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் 2016-17-ம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் வேளாண் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கிசான் சம்பதான் திட்டத்தின் கீழ் உள்ள துணை திட்டங்கள்: (i) மிகப் பெரிய உணவு பூங்கா (ii) ஒருங்கிணைந்த குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்பு கூட்டு கட்டமைப்பு (iii) உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு திறன்கள் உருவாக்கம் / விஸ்தரிப்பு (iv) வேளாண் பதப்படுத்தும் தொகுப்புக்களுக்கான கட்டமைப்பு (v) பிற்படுத்தப்பட்ட மற்றும் முற்படுத்தப்பட்ட இணைப்புகள் உருவாக்கம் (vi) உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதி கட்டமைப்பு (vii) மனிதவளம் மற்றும் நிறுவனங்கள் (viii) பசுமை செயல்பாடுகள். இந்த துணை திட்டங்களின் கீழ் கடனுடன் தொடர்புடைய நிதி உதவியை (மூலதன மானியம்) உணவு மற்றும் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் வழங்குகிறது.
இதுவரை 41 மிகப் பெரிய உணவு பூங்காக்கள், 353 குளிர் பதன கிடங்குகள், 63 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகள், 292 உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், 6 பசுமை செயல்பாடு திட்டங்களுக்கு உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரூ.5,792 கோடி மானியத்துடன் தனியார் துறையின் 792 உணவு பதப்படுத்தும் திட்டங்கள் தொடக்கம்:
இதுவரை 818 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 792 திட்டங்கள் தனியார் துறைகளைச் சேர்ந்தது. இதற்காக ரூ.5,792 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் 3 முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.
உணவு பதப்படுத்துல் துறையில் ரூ.10,900 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது சர்வதேச சந்தையில் இந்திய உணவு பொருட்களின் விற்பனைக்கு உதவும்.
தனியார் சிறு உணவு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு உதவ பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தை உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் அமல்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் 2 லட்சம் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அமைக்கப்படும்.
மூன்றாவதாக பசுமை செயல்பாடுகள் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைகிழங்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் இருந்தது. தற்போது இது விரைவில் அழியக்கூடிய 22 வேளாண் பொருட்களுக்கு நீட்டிக்கப்படும் என 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.
மிகப் பெரிய உணவு பூங்கா திட்டம் குறித்து மதிப்பீடு:
மிகப் பெரிய உணவு பூங்கா திட்டம் குறித்து 3 ஆம் நபர் மதிப்பீட்டை உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் சமீபத்தில் நடத்தியது. இதில் அனுமதிக்கப்பட்ட மிகப் பெரிய உணவு பூங்காங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன. உணவு பதப்படுத்தும் கட்டமைப்பு உருவாக்குதல், மதிப்பு கூட்டு மற்றும் பதப்படுத்துதலில் இதன் தாக்கம், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்தல், விவசாயிகளுக்கு பயன்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற அம்சங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் சரண்
17 Oct 2025சத்தீஸ்கர் : 208 நக்சலைட்டுகள் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.