திட்டம் இரண்டு - விமர்சனம்

Aishwarya-Rajesh-2021-07-30

Source: provided

போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்வதற்காக, ஐஸ்வர்யா ராஜேஷ் பஸ்ஸில் பயணம் செய்கிறார். பேருந்தில் சுபாஷ் என்பவரை சந்திக்க நேர்கிறது. அதனால் அவரின் நட்பு கிடைக்கிறது. பஸ் சந்திப்பு முடிந்து  மீண்டும் சுபாஷை போலீஸ் நிலையத்தில் சந்திக்கிறார். இருவரின் நட்பும் நெருக்கமாக தொடர்கிறது.

சுபாஷிடம் மனதை பறிகொடுக்கிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கல்லூரி தோழி சூர்யா திருமணம் ஆகி சில மாதங்களில் காணாமல் போய்விட்டார் என்பதை அறிந்து அதுபற்றிய விசாரணையில் ஈடுபடுகிறார் ஐஸ்வர்யா. சூர்யா இறந்துவிட்டார், கொல்லப்பட்டார், உயிருடன் இருக்கிறார் என்ற பல தகவல்கள் ஐஸ்வர்யாவை குழப்புகிறது.

ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலன் சுபாஷ்தான் சூர்யா என்றும்,  இவை அனைத்துக்கும் காரணம் அவர்தான் காரணம் என தெரியவர அதிர்ச்சி அடைகிறார் ஐஸ்வர்யா. இந்த குழப்பத்துக்கு விடை சொல்கிறது திட்டம் இரண்டு. காதலுடன் கிரைம் த்ரில்லர் கதையாக இயக்கி இருக்கிறார் விக்னேஷ் கார்த்திக். 

தனது தோழி இறந்துவிட்டாரா, கொல்லப்பட்டாரா. உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியாமல் தவிக்கும் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை கூட மறந்துவிடுவது தோழியின் மீது அவர் காட்டும் நேசத்தை உணர்த்துகிறது.

மாற்றுத்திறானாளி மீது கொலை பழியை திருப்பி கதையை திசை மாற்றி கொண்டு செல்லும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் சஸ்பென்சை எப்படி தக்க வைப்பது என்ற விஷயத்தை சரியாக கையாண்டிருக்கிறார். மாற்று திறனாளியாக நடித்திருக்கும் பாவல் நவகீதன் எதிர்பாராத திருப்புமுனை.

 

கோகுல் பினாயின் கேமரா  காட்சியும் சதீஷ் ரகுநாதனின் இசையும் மிகுந்த  மன  நிறைவு. வாழ்த்துகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து