ஒலிம்பிக் மல்யுத்தம்: கஜகஸ்தான் மல்யுத்த வீரரால் கடிபட்ட இந்திய வீரர் தாஹியா

ravi-boxing-05-08-2021

Source: provided

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அரையிறுதி போட்டியின்போது எதிராளியால் கடிபட்ட இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா நேற்று இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடுமையான கடி...

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவி தாகியா, அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை எதிர்த்து விளையாடினார். அப்போது மிகவும் பின்தங்கியிருந்த இந்திய வீரர் ரவி கடைசி நிமிடத்தில் அதிரடியாக எதிராளியை தரையில் சாய்த்து வெற்றியை கைப்பற்றினார். அப்போது இந்திய வீரரின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்ப அவரது கையை கஜகஸ்தான் வீரர் கடுமையாக கடித்து விட்டார்.

 முழு தகுதியிடன்...

அப்போது வலி கடுமையாக இருந்தாலும் வெற்றியை வசப்படுத்துவதற்காக அதை இந்திய வீரர் பொறுத்துக்கொண்டார். இதனால் இந்திய வீரர் கையில் பல் குறிகளும் ஆழமாக காணப்பட்டன. எனவே அவர் நேற்று மாலை நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் ஆட முழு உடல் தகுதி பெற்றுள்ளாரா என கேள்வி எழுந்தது. ஆனால் இந்திய வீரர்களுடன் உள்ள அதிகாரிகள் குழுவினர் ரவி தாகியா நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

வெள்ளிப் பதக்கம்...

 அதன் பின் நேற்று மாலை நடைபெற்ற 57 கிலோ பிரிவு இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரும் உலக சாம்பியனுமான ஜவுர் யுகெவ்-ஐ ரவிகுமார் தாஹியா எதிர் கொண்டார். இதில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து