எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரவைத் தேர்தல் வியூகம், கூட்டணி, தொகுதிகள் நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, "திராவிடப் பொங்கல்"-னு சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கிட்டேன். அதை கட்டளையாக ஏத்துக்கிட்டு, தமிழ்நாடு முழுக்கவும் கழகத்தின் சார்பில், முன்னெடுத்த திராவிடப் பொங்கல் கொண்டாட்டம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கழகத்தின் சார்பில் செய்யப்பட்ட கொண்டாட்டங்களுடன், அரசு சார்பில் நாம் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், மக்களின் மகிழ்ச்சிய இரு மடங்கு ஆக்கியிருக்கிறது.
பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, எல்லாரும் ரெஸ்ட் இல்லாமல் தேர்தல் பணிக்குத் தயாராக வேண்டும். இன்றைய கவர்னர் உரையில் நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களை தலைப்புச் செய்திகளாக சொல்லியிருக்கோம். இவ்ளோ திட்டங்களை நிறைவேத்தி இருப்பதாலதான் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள். உண்மையான பிரச்சினைகள் பெரிதாக இல்லாததால், வீண் அவதூறுகளைப் பரப்பி, மக்களை குழப்ப நினைக்குறாங்க. அதுக்கு நாம் துளிகூட இடம் கொடுத்து விடக் கூடாது. அதனால்தான், நம் சாதனைகளை எல்லாம், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நம் அரசின் திட்டங்களால் சுமார் 2 கோடி மக்கள் பயனடைகிறார்கள். ஒரு குடும்பம் விடாமல் எல்லாரும் நம் திட்டங்களால் பயனடைய வேண்டும் என பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்திட்டு இருக்கோம். அந்த பயனாளிகள் எல்லோரையும், இனிமேல் நம்மோட வாக்காளர்களாக உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு, உங்களிடம்தான் இருக்கு.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பி.எல்.ஏ.2-க்களை வைத்து, மண்டல அளவில் பெரிய கூட்டங்களை நடத்தினோம். கடந்த தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்றோம். அதன்பிறகு, பி.எல்.சி.-களை நியமிக்கும் பணிகளை தொடங்கி நூறு வாக்காளர்களுக்கு ஒருத்தர்னு பி.எல்.சி.-களை நியமிச்சிருக்கோம். அடுத்து இப்பொழுது, 4 மண்டலங்களிலும் அவர்களைத் திரட்டி மாநாடு நடத்தப் போறோம். இதுவே ஒரு மண்டலத்துக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு பெரிய மாநாடுகளாக இருக்கும்.
நல்லா கேட்டுக்குங்க... தேர்தல் நெருங்கிடுச்சு. இனி நம் சிந்தனை - செயல் எல்லாத்துலயும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். இங்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள் எல்லாரும் இருக்கீங்க. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன். "தேர்தல் வருது நடவடிக்கை எடுக்கமாட்டார்"-னு மட்டும் நினைக்காதீங்க. தனிநபர்களை விட கட்சிதான் பெரிது. அதேமாதிரி, எல்லாரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.
களத்தில் மக்கள் ஏதாவது குற்றம் குறைகளைச் சொன்னால் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். உங்கள் முகத்தில் தப்பித்தவறிகூட, கோபமோ –ஆணவமோ - அதிருப்தியோ வெளிப்படக் கூடாது. அதே போல, நம் தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒருசிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள், தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகிடக் கூடாது. தெளிவாகச் சொல்கிறேன்... கூட்டணி - தொகுதி பங்கீடு - இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எந்த தொகுதியில் யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் நான்தான் களம் காண்பதாக நினைத்து, 100 சதவீத உழைப்பைக் கொடுத்து களப்பணி ஆற்ற வேண்டும்.
நாம ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். உட்கட்சி பிரச்சினைகள் எதுவும் எழக் கூடாது. எல்லோரையும் அரவணைத்துப் போக வேண்டிய பொறுப்புகளில் இங்க இருக்கும் எல்லாரும் இருக்கிறீர்கள். இந்தியாவிலேயே ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, ரொம்ப உறுதியாக, வலிமையாக இருப்பது நாமதான்-னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அதனால, நம்மை எப்படியாவது வீழ்த்திட பல சதித் திட்டங்கள் நடக்கும். அது எல்லாத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உடைத்து, ஒரு வலிமையான கட்சியாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த 3 மாதத்துக்கு உங்கள் உழைப்பு, பொறுமை எல்லாம் ரொம்ப முக்கியம். உங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். நம்மை நம்பித்தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். வெல்வோம் இருநூறு. படைப்போம் வரலாறு. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர


