முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியால் அசாமின் உலக புகழ் பெற்றது 'பகுரும்பா' நடனம்

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      இந்தியா
modi

புதுடெல்லி, உலக புகழ் பெற்ற பகுரும்பா நடனத்தை பிரதமர் மோடியின் சமூக ஊடகத்தில் இருந்து 20 கோடி பார்வையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பிரதமர் மோடி அசாம் மாநிலத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, கவுகாத்தி நகரில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பாரம்பரியமிக்க போடோ கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போடோ சமூகத்தின் பாரம்பரிய செறிவை கொண்டாடும் வகையில், 23 மாவட்டங்களை சேர்ந்த அந்த சமூகத்தின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று கூடி பகுரும்பா நடனம் ஆடினர். 

இயற்கையுடன் ஒன்றிணைந்து ஆடும், தனித்துவ நாட்டுப்புற நடனம் என்ற பெருமையை பகுரும்பா நடனம் பெற்றுள்ளது. மிக பெரிய கலாசார நிகழ்ச்சியான இதனை ஆண், பெண் என இரு தரப்பினரும் பட்டாம்பூச்சிகள், பறவைகள், இலைகள் மற்றும் பூக்களை போன்று பாவனைகள் செய்து ஆட்ட அசைவுகளை வெளிப்படுத்தினர்.

பொதுவாக அவர்கள் குழுக்களாக ஆடுவார்கள். வட்ட வடிவிலோ அல்லது நீண்ட வரிசையிலோ பார்வையாளர்களை கவரும் வகையில் நடனம் ஆடுவார்கள். அது அமைதி, வளம், மகிழ்ச்சி மற்றும் கூட்டு நல்லிணக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். இசையின் தன்மைக்கு ஏற்ப கைகளை பட்டாம்பூச்சிகளை போன்று அசைத்து ஆடுவது இதில் பிரபலம் வாய்ந்தது. இந்த நடனம் உலக அளவில் கவரப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவலில், கடந்த 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கூகுளில் பகுரும்பா நடனம் பற்றி உலக அளவில் அதிகம் தேடப்பட்டு உள்ளதுடன், பிரதமர் மோடியின் சமூக ஊடகத்தில் மட்டுமே 20 கோடி பார்வைகளை பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து