புதுவை மத்திய பல்கலை.யில் பி.எச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு

Pondi-college-2021-08-19

Source: provided

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலை மற்றும் பி.எச்.டி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் படிப்புகள், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள், பி.எச்.டி, முதுநிலைப் பட்டயப் படிப்பு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் இங்கு படித்து வருகின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பல்கலைக் கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.

சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14 கடைசித் தேதியாக இருந்தது. மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க விண்ணப்பிக்கக் கடைசித் தேதி இன்று 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  பல்கலைக் கழத்தில் உள்ள படிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு, தேர்வு முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.  புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தின் இணைய முகவரி: www.pondiuni.edu.in ஆகும்.  மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் இங்கு இலவசமாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து