மே. வங்க தேர்தல் வன்முறை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

Cbi 2020 07-18

Source: provided

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது. 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானவுடன், பா.ஜ.க. உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். சில இடங்களில் பா.ஜ.க. அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த வன்முறையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த பல தொண்டா்கள் கொல்லப்பட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதேபோல இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் திரிணாமுல் தொண்டா்களால் தாக்கப்பட்டதாக அக்கட்சியினா் தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு தரப்பினரிடையே விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும், சி.பி.ஐ. மூத்த அதிகாரியின் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து