முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புதிதாக 45,083 பேருக்கு தொற்று

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 083 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,956,030 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 460  பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,37,830 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 சதவீதமாக  உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35,840 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,18,88,642 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.53 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,68,558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.19 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 63.09 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரேநாளில் மட்டும் 73,85,866 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து