விநாயகர் சதுர்த்தி விழா: பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்: பூக்களின் விலை அதிரடி உயர்வு

vinayagar-malar-2021-09-09

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பூஜை பொருட்கள் விற்பனை களைக்கட்டியுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் அங்காடியில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். அதே போல், கோயம்பேடு சந்தையில் பூஜை பொருட்களின் விற்பனையும் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தின் டவுன் ஹால், பூ மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் விநாயகர் சிலை உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரையில் பூஜை பொருட்கள் விற்பனை நடைபெற்றது. ஒருங்கிணைந்த மலர் சந்தையில் பொதுமக்கள் அதிகளவில் பூக்களை வாங்கி சென்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட் மற்றும் சந்தைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது. விநாயகர் சதுர்த்தி அன்று புதுச்சேரியில் வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து