முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      இந்தியா
ahmedabad-plane-crash-2025-06-12

புதுடெல்லி,  ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு (ஏ.ஏ.ஐ.பி.) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், "விமானத்தின் 2 இன்ஜின்களுக்கும் எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகளில் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அது உடனடியாக ரன் நிலைக்கு சுவிட்ச் நகர்த்தப்பட்டபோதும்,  இரண்டாவது என்ஜின் ஷட் டவுன் ஆகியதால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

விமான விபத்துக்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கான உடனடி ஆதாரங்கள் ஏதும் இல்லை. மேலும், வானிலை பிரச்சினைகள் எதுவும் காரணமாக இருக்கவில்லை. வானம் தெளிவாக இருந்தது. காற்று மிகவும் வலுவாக இல்லை. விமானிகள் ஆரோக்கிமானவர்களாகவே இருந்துள்ளனர். போதிய ஓய்வை எடுத்துள்ளனர். மேலும், இந்த வகை விமானத்தை இயக்குவதில் அவர்களுக்கு போதிய அனுபவம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து