இன்று பெரியாரின் பிறந்தநாள் உறுதிமொழி ஏற்கிறார் முதல்வர்

Stalin 2020 07-18

பெரியாரின் பிறந்தநாளில் கலைஞர் சிலை முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிநாள் உறுதியேற்க உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :

பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர் தந்தைப் பெரியார் அவர்களின் 143-வது பிறந்த நாளினை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (17.9.2021) காலை 10.00 மணியளவில், மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காலை தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும்.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து