யூடியூப்பில் ஆபாச பேச்சு: டிக்டாக் திவ்யாவை கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலீஸ்

Diktak-Divya 2021 09 17

டிக் டாக் பெண் பிரபலங்கள் இடையே 3 ஆண்டுகளாக நீடித்த மோதலில் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தேனி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர். மேலும் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். இதேபோல டிக்டாக்கில் பிரபலமானவர் தஞ்சாவூரை சேர்ந்த திவ்யா.டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர், யூடியூப் சேனல் மூலம் திவ்யா வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இவரது வீடியோக்கள் பெரும்பாலும் ஆபாசமாக இருந்ததால் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். டிக்டாக் பிரபலங்களான திவ்யாவிற்கும், சுகந்திக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக மோதல் இருந்து வந்தது.

 

இந்த நிலையில் கடந்த மாதம் 8-ம் தேதி திவ்யா சமூக வளைதளத்தில் தன்னை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக தேனி சைபர் கிரைம் போலீசாரிடம் சுகந்தி புகார் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து திவ்யாவை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து சைபர் கிரைம் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நாகபட்டினத்தில் சுற்றித்திரிந்த திவ்யாவை போலீசார் கைது செய்தனர். அவரை  தேனி எஸ்.பி. அலு வலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து திவ்யாவை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து