மறக்க முடியாத நிகழ்வை பகிர்ந்த சி.எஸ்.கே வீரர் !

Moien-Ali 2021 09 28

சேப்பாக்கம் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டதை மறக்க முடியாது என டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி கூறியுள்ளார்.

அஜித் நடிக்கும்...

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் வலிமை என்கிற படம் உருவாகி வருகிறது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பொங்கலன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர் கேள்வி...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் சென்னையில் நடைபெற்றபோது இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, எல்லைக்கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, அஜித் ரசிகர் ஒருவர் அவரிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டார். இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் இதுபற்றி விசாரித்துள்ளார் மொயீன் அலி.

மறக்க முடியாது... 

 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி, சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் தளத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் சேப்பாக்கம் மைதானத்தில் மறக்க முடியாத அனுபவம் பற்றி அவர் கூறியதாவது., சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டதை மறக்க முடியாது. அதேபோல, மைதானத்துக்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தார்கள். அற்புதமாக இருந்தது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து