முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      தமிழகம்
Whether 2023-11-10

Source: provided

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வட மாவட்டங்களுக்கு மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் இந்த வார துவக்கத்தில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மண்டலமாக வலுப்பெறாமல், வலுவிழந்து, நேற்று முன்தினம் இருந்த தடம் தெரியாமல் மறைந்துவிட்டது. இதனால், நேற்று முன்தினம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு இல்லாமல் சூரியன் தென்பட்டது. ஆனால், நேற்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியிருக்கிறது. இதனால் மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் மாறி அவ்வப்போது சிறு தூறல்கள் பெய்து வருகிறது.

இந்த நிலையில், வங்கக் கடலில் நேற்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதகாவும், இது அக். 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அக்.27ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் முதல் புயலாக உருவாகவிருக்கும் இந்த புயல் சின்னத்துக்கு மோந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, வரும் 27-ம் தேதி காலை புயலாக வலுப்பெறும். அதாவது, திங்கள்கிழமை காலை தென்மேற்கு, மேற்கு மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், இது ஆந்திரம் நோக்கிச் சென்றாலும் தமிழகத்தில் வட மாவட்டங்களுக்கு மழைப்பொழிவு கொடுக்கும் என்றும், பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு இல்லாமல் கன மழையாக இருக்கும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வட மாவட்டங்களான சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அக். 26ம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மிக கனமழை பெய்யும் என்றும், அக். 28ஆம் தேதி திருவள்ளூர், ராணிபேட்டையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, நிலப்பரப்புக்கு வெகு தொலைவில் நடுக் கடலில் இருப்பதால், இது புயலாக மாறி கரையைக் கடக்க அதிக சாதகங்கள் இருப்பதாகவும் புயல் சின்னமாக மாறி ஆந்திரம் நோக்கி நகர்ந்தாலும் சென்னைக்கு மழைப் பொழிவு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அக். 28 வரை காற்றழுத்த தாழ்வு நிலை மெல்ல வலுப்பெற்று ஆந்திரம் நோக்கிச் சென்றாலும் கடலில் சூறைக்காற்று, கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. 

புயலுக்கு பெயர் 'மோந்தா'

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த 'மோந்தா' என்று பெயரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் புயல்களுக்கு நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களே சூட்டப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து