முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      உலகம்
Pak 2024-02-14

பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

இந்த சூழலில் தங்கள் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் குனார் ஆற்றில் ஒரு பெரிய அணையைக் கட்டி, நீர் ஓட்டத்தைக் தடுக்க தாலிபான் முடிவு செய்துள்ளது. அணையின் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு தாலிபான் உச்ச தலைவர் மௌல்வி ஹிபதுல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளில் உருவாகும் 480 கி.மீ நீளமுள்ள குனார் நதி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நுழைந்து காபூல் நதியில் இணைகிறது. பாகிஸ்தானில், இது சித்ரல் நதி என்று அழைக்கப்படுகிறது. காபூல் நதி ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாயும் மிகப்பெரிய நதியாகும். இது இறுதியாக அட்டோக்கில் சிந்து நதியுடன் இணைகிறது.

குனார் நதியில் அணை கட்டப்பட்டால், அதன் தாக்கம் காபூல் நதியிலும், பின்னர் சிந்து நதியிலும் இருக்கும். இது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கும், முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது போல ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானின் நீராதாரத்தை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவது கவனம் பெற்றுள்ளது.

தாலிபான்கள் இந்தியாவிடம் சேர்ந்து டங்காக்குக்கு எதிராக பயங்கரவாத சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து