முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      தமிழகம்
Pannirselvam

Source: provided

நாகப்பட்டினம்: வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை சம்பா நெற்பயிர்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் முட்டுமில்லாமல் இடையில் போடப்பட்டிருந்த சம்பா இளம் பயிர்களும் நீரில் மூழ்கியது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக கனமழையானது ஓய்ந்து இருந்தாலும் குறுவை நெற்பயிர்கள் இருக்கக்கூடிய நிலப்பரப்பில் அதிக அளவிலான மழைநீர் தேங்கியிருப்பதால் விவசாயிகள் தங்களது பயிரை அறுவடை செய்யாமல், மீட்டெடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் நாகப்பட்டினம் திருமருகல், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் மேற்கொண்டு வருகிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் கருவேலங்கடை பகுதியில் மூழ்கியிருந்த சம்பா நெற்பயிர்களை ஆய்வு செய்து விவசாயிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

விவசாயியும் நெற்பயிர்கள் பாதிப்பு குறித்தும் தண்ணீரில் மூழ்கிய தண்ணீரானது விடியவில்லை எனவும் வடிகால் பிரச்னை நீண்ட வருடங்களாக இருப்பதாகவும் பொதுப்பணி துறை வேளாண்துறை உள்ளிட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகளை விவசாயிகள் அமைச்சர்களிடம் நேரடியாக குறைகளை முன்வைத்து அவர்கள் தெரிவித்தார்கள். தொடர்ச்சியாக சின்னத்துரை கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டு வரும் அமைச்சர் திருவான்மியூர் கிராமத்தில் இருக்கக்கூடிய குறுவை சார்ந்த நெற்பயிர்கள் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கேட்டறிகிறார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.1லட்சத்து 20ஆயிரம் பரப்பளவில் நெல் சாகுபடி 20 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், கிட்டத்தட்ட மீதமுள்ள நெற்கதிர்களை மழையால் நனைந்து நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமல் பல்வேறு கிராம விவசாயிகள் தவித்து வருகின்றனர். விவசாயிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் உரிய இழப்பீடு வழங்கப்படும். நிவாரண பெற்று தருவத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரோடு தமிழ்நாடு மீனவளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்ட வேளாண்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு இருக்கிறார்கள். அடுத்தபடியாக நாகப்பட்டினம் முழுவதும் ஆய்வு மேல்கொள்ளப்படும். துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி மொத்த கணக்கெடுப்பு எவளோ, எவளோ பாதிப்பு நாகப்பட்டினத்தில் ஏற்பட்டிருக்கிறது என விவரங்களை கேட்டறிய இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து