முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      உலகம்
Trump 2023-04-13

Source: provided

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்த போரை ஊக்குவிப்பதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில் அந்த நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது. மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் அறிவுறுத்தலையடுத்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளதாக வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளைமாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கரோலின் கூறுகையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சீனா குறைத்துக்கொண்டதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் வேண்டுகோளை ஏற்று ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து