முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிகரமாக மூன்று வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : விண்கலம் சுமார் ஆறறை மணி நேர பயணத்துக்கு பிறகு சீனாவின் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே சீனா சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணிகளை மேற்கொண்ட சீனா, ராக்கெட்டுகள் மூலம் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான தளவாடங்களை விண்வெளிக்கு சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் விண்வெளி குழுவினரை விண்வெளிக்கு சீனா அனுப்பியது. அவர்கள் 3 மாதங்கள் தங்கி விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை செய்து விட்டு பூமிக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா 3 விண்வெளி வீரர்களை மீண்டும் தனது விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது. லாங்கு மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங், யே குவாங் பு ஆகிய 3 வீரர்களும் விண்வெளிக்கு முதல்முறையாக சென்றனர். இதில் ஒரு பெண் வீராங்கனையும் அடங்குவார்.

இந்த ராக்கெட் ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களில் விண்கலம் தனியாக பிரிந்து புவி வட்ட பாதையில் நுழைந்தது. விண்கலம் சுமார் 6½ மணி நேர பயணத்துக்கு பிறகு  சீனாவின் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது. விண்வெளி நிலையத்துடன் இணைந்த பிறகு 3 வீரர்களும் அதற்குள் சென்றனர்.

3 விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்துக்கான அடுத்தக்கட்ட பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருப்பார்கள் என்றும் விண்வெளி நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கான கருவிகளை நிறுவ அவர்கள் விண்வெளி நடைபயணங்களை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து