முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணையில் நீர் அளவு அபாயம் இல்லாதபோது பேசவேண்டிய அவசியமென்ன? - சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முல்லை பெரியாறு அணையின் நீர் அளவு அபாய கட்டத்தில் இல்லாதபோது இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமென்ன என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஜோய் ஜோசப் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அணையின் பாதுகாப்பு, பராமரிப்பை கேரளாவிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைப்பதை கேரள அரசு உறுதி செய்ய உத்தரவிடவும், முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 136 அடியாக இருக்கிறது, 141 அடிக்கு உயர்ந்தாலும் பாதுகாப்பானதே என்றே ஆய்வுகள் கூறுவதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது மழை குறைந்ததால் அணை நீர் மட்டம் குறித்து விசாரிக்கத் தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம் மேற்கொண்டது. மேலும், அணை தீவிர கண்காணிப்பில் உள்ளதால், நீர் அளவில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை எனவும், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுவது கவலை அளிக்கிறது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

முல்லை பெரியாறு வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், முல்லை பெரியாறு அணையின் நீர் அளவு அபாய கட்டத்தில் இல்லாதபோது இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமென்ன என்று கேள்வி எழுப்பியதுடன், வழக்கை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து