முக்கிய செய்திகள்

சூப்பர் ஹீரோவாக களம் இறங்கும் கதாநாயகி

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Aditi-Vers- 2021 11 22

Source: provided

இந்திய அளவில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து உருவாகும் திரைப்படம் கிரவுன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் மற்றும் அரபிக் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது. இதில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார்,  மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட், அரபிக், சைனா, சவுத் கொரியா போன்ற நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் இந்தி, தெலுங்கு, தமிழ்  திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர். படத்தை நரேன் பிரநிஸ் ராவ் இயக்குகிறார் இவர் மலேசியா தமிழராவார். தமிழன் என்று சொல் மற்றும் லிவிங் டுகெதர் என்ற படங்களின் இயக்குனர் பொன்சங்கர்  இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். மேலும் இயக்குனர் நரேன் பிரநிஸ் ராவ் இப்படத்தைப் பற்றி கூறுகையில் உயரிய தொழில் நுட்பங்களைக் கொண்டு படத்தை 3டியில் இயக்கி உள்ளதாக தெரிவித்தார். இப்படத்தை கியுபிரேம் மூவி  சார்பில் டாக்டர் அரவிந்த். K மற்றும்  ஒயிட் சாண்ட் புரோடக்சன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து