முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூலிழையில் உயிர் தப்பிய படக்குழு

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை மையமாக வைத்து ஜி.வி.பெருமாள் வரதன், ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். சில வரலாற்று காட்சிகளை படமாக்குவதற்காக செங்கல்பட்டு அருகே பிரமாண்ட  அரங்குகள் சிலவற்றை அமைத்துள்ளார். அதில் குருகுலம் ஒன்றையும் பல லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கினார். இந்த குருகுலம், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் பாதிப்புக்குள்ளானது. அப்போது அந்த இடத்தில் படக்குழுவை சேர்ந்த ஐந்து பேர் இருந்துள்ளனர். விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த ஐந்து பேரும் அங்கிருந்து வெளியேறியதால், நூலிழையில் உயிர் தப்பினார்கள். இது குறித்து கூறிய இயக்குநர், எதிர்பாராத இந்த விபத்திலிருந்து மீண்டு விரைவில் படப்பிடிப்பை துவங்குவோம்.” என்றார். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ பட நாயகன் சுரேஷ் ரவி, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!