முக்கிய செய்திகள்

பிஹார், உ.பி., ஜார்க்கண்ட் ஏழை மாநிலமாக அறிவிப்பு : நிதி ஆயோக் ஆய்வில் தகவல்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      இந்தியா
NITI 2021 11 27

Source: provided

புதுடெல்லி : பிஹார், உ.பி., ஜார்க்கண்ட் ஏழை மாநிலமாக உள்ளதாக நிதி ஆயோக் ஆய்வில் வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் அமைப்பு இந்திய மாநிலங்களின் பொருளாதார நிலையை பன்முக ஏழ்மை குறியீட்டெண் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் வாழ்க்கை தரம் உள்ளிட்ட 12 காரணிகளைக் கணக்கில் கொண்டு நிதி ஆயோக் தயாரித் துள்ள மாநிலங்களின் ஏழ்மை குறியீட்டெண் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 3 ஏழை மாநிலங்களாக உள்ளன. பிஹார் மக்கள் தொகையில் 51.91 சதவீதத்தினரும், ஜார்க்கண்டில் 42.16 சதவீதத்தினரும், உ.பி.யில் 37.79 சதவீதத்தினரும் ஏழ்மையில் உள்ளனர். ம.பி.யில் 36.65, மேகாலயாவில் 32.67 சதவீதம் ஏழை மக்கள் உள்ளனர். பட்டியலில் கடைசி ஐந்து இடங்களில் கேரளா (0.71%), கோவா (3.76%), சிக்கிம் (3.82%), தமிழ்நாடு (4.89%), பஞ்சாப் (5.59%) மாநிலங்கள் உள்ளன.

நிதி ஆயோக்கின் இந்த ஏழ்மை குறியீட்டெண் அறிக்கைசர்வதேச அளவில் அங்கீகரிக் கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஏழ்மை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐக்கிய நாடு கள் மேம்பாட்டு திட்டம் இணைந்து உருவாக்கிய ஆய்வு முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறும்போது, ‘‘இந்த தேசிய பன்முக ஏழ்மை குறி யீட்டெண் ஆய்வறிக்கை இந்தியா வில் பொது கொள்கைகளை வகுக்க பெரிதும் உதவுகிறது. ஆதாரங்கள் அடிப் படையிலும், கவனம் செலுத்தும் தலையீடுகள் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வு முறையில் யாரும் விடுபடவில்லை என்ற இலக்கை எட்ட முடிகிறது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து