முக்கிய செய்திகள்

தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு: வரும் 16, 17-ம் தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம் - தர்ணா அறிவிப்பு

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      இந்தியா
Bank 2021 07 28

வங்கிகள் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து இந்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதி இரு நாட்கள் வேலைநிறுத்தம் மற்றும் தர்ணா செய்யப்போவதாக வங்கி யூனியன் அமைப்பான யு.எப்.பி.யு தெரிவித்துள்ளது.

2021-22ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ நடப்பு நிதியாண்டில் இருபொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி யூனியன்கள் இருநாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின்(ஏஐபிஓசி) பொதுச்செயலாளர் சஞ்சய் தாஸ் கூறுகையில் “ வங்கிகள் தனியார்மயமாக்கத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால், டிசம்பர் 16 மற்றும் 17-ம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்படும். தொடர்ந்து போராட்டங்கள், தர்ணாக்கள் நடத்தப்படும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னுரிமைத் துறைகளைப் பாதிக்கும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதும் பாதிக்கும்.

மத்திய அரசின் இந்த திட்டம் முழுமையாக அரசியல் நோக்கம் சார்ந்த முடிவாகும். வங்கிகளை பெரிய முதலாளிகள் வசம் கொடுக்க அரசு விரும்புகிறது. நாட்டின் ஒட்டுமொத்த டெபாசிஸ்டகளில் 70 சதவீதம் பொதுத்துறை வங்கிகளில்தான் இருக்கிறது. இந்தவங்கிகளை தனியாரிடம் வழங்கும்போது, சாமானிய மக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் ஆபத்தில் முடியும்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து