முக்கிய செய்திகள்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசன டோக்கனை மாற்றிக்கொள்ள வசதி : தேவஸ்தானம் அறங்காவலர் அறிவிப்பு

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Tirupati 2021 07 23

Source: provided

திருப்பதி : வரும் 18-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை டிக்கெட் பெற்றுக் கொண்டு திருப்பதிக்கு வர முடியாத பக்தர்கள் தரிசன டோக்கன்களை தேதி மாற்றம் செய்துகொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வைபை சுப்பா ரெட்டி , மழை வெள்ளம் மற்றும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட காரணமாக வரும் 18-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை  தரிசன டோக்கன்கள் இருந்தும் திருப்பதிக்கு  வரஇயலாத பக்தர்கள் அந்த டோக்கன்கள் மூலம் மூன்று மாத காலத்துக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்றார்.

மேலும் இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசனம் டோக்கன்கள் மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் இணையதளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.          

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து