எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 18 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் நடந்தது. ரஷியா-குரோஷியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் ரஷியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று டேவிஸ் கோப்பையை கைப்பற்றியது.
2-வது ஒற்றையர் ஆட்டத்தில் டேனில் மெட்வதேவ் (ரஷியா) 7-6 (9-7), 6-2 என நேர் செட் கணக்கில் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தினார். இதன்மூலம் ரஷியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்று உள்ளது. ஒட்டு மொத்தத்தில் ரஷியா 3-வது முறையாக பட்டம் பெற்று உள்ளது. இதற்கு முன்பு 2002, 2006-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தது.
ஹேட்லி சாதனையை சமன் செய்த அஸ்வின்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 1956-ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதுவரை 22 தொடர் முடிந்து உள்ளது. தற்போது 23-வது தொடர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார். அவர் 14 டெஸ்டில் 24 இன்னிங்சில் 65 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார்.
ஹேட்லியின் இந்த சாதனையை அஸ்வின் சமன் செய்தார். மும்பை டெஸ்டில் அவர் 3 விக்கெட் கைப்பற்றினார். ரோஸ் டெய்லரை அவுட் செய்ததன் மூலம் அவர் இந்த சாதனையை சமன் செய்தார்.அஸ்வின் 9 டெஸ்டில் 17 இன்னிங்சில் 65 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: பதக்கத்தை தவறவிட்டது இந்தியா
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் பிரான்ஸ் வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 0-2 என பின்தங்கி இருந்தது.
இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. முன்னதாக ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: கார்ல்சன் முன்னிலை
துபையில் நடைபெற்றும் வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 5 ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் 136 நகர்த்தலுக்குப் பிறகு கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக நகர்த்தல் கொண்ட ஆட்டம் அதுதான். 7-வது ஆட்டத்தை கார்ல்சன் டிரா செய்தார். கார்ல்சன் - நிபோம்நிஷி இடையிலான 8-வது ஆட்டம் நடைபெற்றது.
மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இதுவரை கார்ல்சன் 5 புள்ளிகளும் நிபோம்நிஷி 3 புள்ளிகளும் எடுத்துள்ளார்கள். 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிப்பதால் உலக சாம்பினாக கார்ல்சன் மீண்டும் மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, ஓய்வு நாளாகும். 9-வது ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
மும்பை டெஸ்ட் தொடர்: வைரலான 4 பேர் புகைப்படம்
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அக்ஷர் படேல், ஜடேஜா, அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திரா ஆகிய நால்வரும் இணைந்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டு பாராட்டு பெற்றுள்ளது.
நால்வரின் சட்டைகளிலும் பின்னால் எழுதப்பட்ட பெயர்களின் வழியே அக்ஷர் படேல், ரவிந்திர ஜடேஜா ஆகிய பெயர்கள் ஆங்கிலத்தில் வரிசையாக உள்ளன. இந்தப் புகைப்படம் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய கேப்டன் கேப்டன்கள்
காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியதால் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. டி20 தொடர் டிசம்பர் 13-ல் ஆரம்பிக்கிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியுள்ளார். மே.இ. தீவுகள் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப்பும், டி20 அணிக்கு நிகோல்ஸ் பூரனும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஷாய் ஹோப் முதல்முறையாக ஒருநாள் கேப்டனாகச் செயல்படவுள்ளார். பூரன் தலைமையில் சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 4-1 எனத் தொடரை வென்றது.
நியூசிலாந்து அணி வீரர் அஜாஸ்-க்கு சிறப்பு பரிசு
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீரர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றியிருந்தார். மேலும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2-வது டெஸ்ட் போட்டியின் முடிவில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விஜய் பாட்டீல் பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்த போட்டியின் முதன் இன்னிங்ஸ் அதிகாரப்பூர்வ ஸ்கோர் ஷீட்டையும் அவர் வழங்கினார். அப்போது கிரிக்கெட் பந்து மற்றும் விளையாட்டின்போது அவர் பயன்படுத்திய டீசர்ட் ஆகியவற்றை மும்பை கிரிக்கெட் சங்க அருங்காட்சியகத்திற்கு அஜாஸ் பட்டேல் வழங்கினார்.
ஜன. 2-வது வாரத்தில் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்
2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கூடுதலாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரி 2வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஜன. முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், அகமதாபாத்தை ஏலம் எடுத்த சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு புகார் விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும். பின்னர் 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை வாங்கிக்கொள்ள 31ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து ஜன.2வது வாரத்தில் வீரர்கள் பொது ஏலம் நடைபெறும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் விருப்பத்தை நிராகரித்த ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி
21 Oct 2025இஸ்ரேல் : அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு ட்ரம்ப் விருப்பத்தை ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி நிராகரித்தார்.
-
புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்
21 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்
21 Oct 2025மும்பை : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
-
பீகார் தேர்தலில் பின்வாங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
21 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பின்வாங்கினார்.
-
இந்திய கேப்டன் வேதனை
21 Oct 2025மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார்.
-
வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்
21 Oct 2025கொல்கத்தா : இந்திய ராணுவத்தினர் வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.
-
ரிஸ்வான் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்
21 Oct 2025லாகூர் : ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜப்பானின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
21 Oct 2025ஜப்பான் : ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
21 Oct 2025புதுடெல்லி : உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன் என்று நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
மகளிர் உலகக்கோப்பை 22வது லீக்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு
21 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
-
இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் போட்டி: குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60
21 Oct 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60 என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருவாரூரில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த இ.பி.எஸ்
22 Oct 2025திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.