முக்கிய செய்திகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை தல்லாகுளம், அழகர்கோவில், சோழவந்தான் : பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு.

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      ஆன்மிகம்
NAGOOR

வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலையில் மதுரை தல்லாகுளம் பிரசன்னவெங்கடாசலபதி கோவில், அழகர்கோவில், கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் கோவில், சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலையில்5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்க வாசல் வழியாக சர்வ அலங்காரத்துடன் பெருமாள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திராளன பக்தர்கள் சொர்க்கவாசல் முன்பு நின்று பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம் ஆனால் கொரோனா பாதிப்புகளை தடுப்பதற்காக  தமிழக அரசின் அறிவுறுத்தல் படி  அதிகாலையில் பகதர்களுக்கு  அனுமதி இல்லை . காலை 6மணிமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.ஆண்கள்.பெண்கள்.முதியவர்கள்.குழந்தைகள் என முக கவசம் அணிந்து சமுக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள். சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் போது சொர்க்க வாசலில் படிகளை தொட்டு வணங்கி வந்தார்கள். முரன் என்ற மிகப்பெரிய அரக்கன். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தார். அவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் அரக்கனுடன் போரிட்டார். ஆனால் அவன் பல மாய வடிவங்களில் தோன்றி போர் புரிந்து வந்தான். ஒருநாள் ஒரு குகையில் சென்று ஓய்வு எடுக்க பெருமாள் சென்றார். இதைப் பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன் என்ற மிகப்பெரிய அரக்கன் பெருமாலை தாக்குவதற்கு வருகிறான். அப்போது திருமாலின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி பெண் வடிவமாக மாறி அரக்கனுடன் போரிட்டு வென்றார். இதை பார்த்த திருமால் மனம் மகிழ்ந்தார். அசுரனை அழித்த அந்த சக்தி பெண்ணுக்கு ஏகாதசி என பெயர் சூட்டினார். அன்றைய நாள் ஏகாதசி இருந்ததால் அந்த பெண்ணுக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன் என்று வரம் அளித்தார். இதனால் இந்த தினத்தை வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகச்சிறப்பாக இன்று கொண்டாடப்படுகிறது. இதன்படி பக்தர்கள் ஏராளமானோர் கண்விழித்து வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்வோர் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது ஐதீகம். இதன்படி ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். மேலும் நேற்று ஏகாதசியை முன்னிட்டு மதுரையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் இன்று அதிகாலையே திறக்கப்பட்டது. அப்போது சொர்க்கவாசல் வழியாக பெருமாள் சர்வ அலங்காரத்துடன் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தல்லாகுளம்

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று 4.50 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் வந்தார். அப்போது சொர்க்கவாசல் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாள் கோவிலை சுற்றி மீண்டும் கோவிலுக்குள் சென்றார்.

அழகர்கோவில்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் முதல் பகல் பத்து உற்சவ திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை நடந்தது. இதில் மேளதாளம் முழங்க வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5.15 மணிக்கு கள்ளழகர் என்கிற சுந்தரராச பெருமாள் செர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டபத்தை சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது.தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தரராச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த இந்த விழாவில்காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர.கொட்டும் பனியையும், பொருட்படுத்தாமல் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து