எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒமைக்ரானை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ அதிக தொற்று தன்மை கொண்ட ஒமைக்ரான் உலகளவில் பரவி வருகிறது. ஒமைக்ரான் மிதமான பாதிப்பை எற்படுத்துகிறது என்பதை ஏற்க முடியாது. அதனை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் ஐரோப்பா தற்போது கொரோனா பரவலின் மையமாக உள்ளது. கடந்த வாரம் மட்டும் ஐரோப்பாவில் 50 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1 லட்சம் பேர் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா , 2020 தொடங்கியவுடனேயே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளை கடந்த பிறகு கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை. தடுப்பூசியால் கொரோனாவின் தீவிரத் தன்மை உலகளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கொரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுனர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


