முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு நாட்டில் தலைமுடி தானம் செய்த ஆயிரக்கணக்கானோர்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

பெருவில் கடலில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை நீக்க ஏராளமானோர் தங்கள் முடியை தானமாக வழங்கி வருகின்றனர். பெருவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு சென்ற கப்பலில் ஏற்பட்ட கசிவு காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் கடற்பரப்பு மாசடைந்தது. 6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கலந்துள்ளதாகவும், 21 கடற்கரைகள் எண்ணெய் கழிவால் மாசடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. கடற்கரையில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், எண்ணெய் கசிவை அகற்ற புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது பெரு சுற்றுச்சூழல் அமைச்சகம். 

முடியை கயிறு போல உருளை வடிவில் திரித்து அதனை கடற்கரை அலைகளில் மூழ்கடிக்கும்படி செய்வதால் நீரில் உள்ள எண்ணெய் படலங்களை முடி உறிஞ்சி விடும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பல டன் கணக்கிலான முடி தேவைப்படும் நிலையில், எண்ணெய் படலத்தை அகற்ற பொதுமக்கள் தங்கள் முடியை தானமாக வழங்கலாம் என அரசு, சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தது.

இதையடுத்து சிகை அலங்கார நிபுணர்கள் உதவியுடன் லிமா நகராட்சி அலுவலகத்தில் முடி சேகரிப்பு மையமும் அமைக்கப்பட்டது. இதனை அறிந்த அந்நாட்டு மக்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்கள் முடியை தானமாக வழங்க படையெடுத்துள்ளனர். அண்மையில் டாங்கோ அருகே கடலில் எரிமலை வெடித்ததின் எதிரொலியாக பெருவில் எழுந்த உயர் அலைகளால் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததே இந்த பேரிடருக்கு காரணம் என கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து