முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை சனிக்கிழமையும் மனுதாக்கல் செய்யலாம்: தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை சனிக்கிழமையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இது குறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சாதாரண தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையினை தமிழக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் 26-ம் தேதி அறிவித்திருந்தது. அதன்படி வேட்புமனுக்கள் இன்று 28-ம் தேதி காலை 10 மணி முதல் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் தங்களது வேட்புமனுவை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாளை  29-ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை ஏற்று வாக்குப்பதிவு நேரத்தினை காலை 7 மணி முல் மாலை 6 மணி வரை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவினை நடத்திடவும் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளனவர்கள் மட்டும் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து