எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, எம்.டி., எம்.எஸ்., போன்ற மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடும், 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர் பார்க்கவியான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள 969 இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது.எனவே, அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அல்லது ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு சலுகையை மட்டும் வழங்க வேண்டுமென்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் அரசு மருத்துவர் சார்பில், ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் மற்றும் அணுக முடியாத பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவதாக வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இரண்டு சலுகைகளும் வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்க தடை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் பார்க்கவியான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய் மற்றும் சத்திக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்ததுள்ளனர்.
மேலும், நடப்பு கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர். இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தமிழக அரசு முடிவை எதிர்த்து எதிர்காலத்தில் வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் அறிவுறுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு
18 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 18 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி
18 Oct 2025சென்னை, சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 8 பேர் பலி
18 Oct 2025காபூல், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு
18 Oct 2025புதுச்சேரி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் - ஆப்கான் மோதலை தீர்ப்பது மிக எளிது: அதிபர் ட்ரம்ப்
18 Oct 2025வாஷிங்டன் : பாகிஸ்தான் - ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கம்
18 Oct 2025லண்டன், பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கத்தை அந்த நாட்டு மன்னர் சார்லஸ் அறிவித்துள்ளார்.