முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புராதன பொருள்கள் மோசடி புகார்: நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சனிக்கிழமை, 14 மே 2022      சினிமா
Mohanlal 2022-05-14

புராதன பொருள்கள் மோசடி புகார் குறித்து நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு சென்று வந்த நடிகர் மோகன்லாலிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். மோன்சன் புராதன பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வந்து சென்றனர். இவரிடம் பழங்கால புராதன பொருள் வாங்கிய ஒருவர், மோன்சன் மாவுங்கல் தன்னை மோசடி செய்து விட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக போலீசார் மோன்சன் மாவுங்கல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதற்கிடையே மோன்சன் மாவுங்கல் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அமலாக்க துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு வந்து சென்ற பிரபலங்கள் மற்றும் அவரிடம் பழங்கால பொருட்கள் வாங்கியவர்களிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். அந்த வகையில் மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு சென்று வந்த நடிகர் மோகன்லாலிடமும் விசாரணை நடத்த அமலாக்க துறையினர் முடிவு செய்தனர். 

இதையடுத்து மத்திய அமலாக்க துறையினர் நடிகர் மோகன்லாலுக்கு இது தொடர்பாக சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் அடுத்த வாரம் அமலாக்க துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறியுள்ளனர். இது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து