முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் அடுத்தடுத்து சோகம்: கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

திங்கட்கிழமை, 16 மே 2022      உலகம்
Gan 2022 03 15

Source: provided

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பப்பல்லோ நகரில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் 2 தினங்களுக்கு முன்பு  தலைகவசம் மற்றும் கவச உடை அணிந்து நுழைந்த 18 வயதான வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டான்.

இந்த துப்பாக்கி சூட்டில்10 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பும் வகையில் அவன் கேமராக்களை பொருத்தி இருந்தான். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது அடங்குவதற்குள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்து மற்றொரு மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.இதில் ஒருவர் இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவனிடம் இருந்து துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!