முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம்

திங்கட்கிழமை, 16 மே 2022      தமிழகம்
Tasmac 2022 02 09

Source: provided

கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் தொடங்கியது. 

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மது பானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வன பகுதியிலும், விளை நிலங்களிலும் சிலா் வீசி வருகின்றனா். வன பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுபுறமும் மாசுபட்டு நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் காணப்படும் காலி மதுபாட்டில்களைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மதுபானங்களின் காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கொடுத்து, ரூ.10-தை வாடிக்கையாளா்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடா்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேலும் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. மேலும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் திட்டமும் தொடங்கியது. இதற்கிடையே அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து மதுபான பாட்டில்கள் மீது டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் கூறியதாவது:- ஸ்டிக்கருடன் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் அளித்து ரூ.10 வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். எனவே பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையங்களில் ஒப்படைத்தோ அல்லது டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து