முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். படப்பாடலுடன் முதல்வரை வரவேற்ற பேண்ட் வாத்திய குழுவினர்

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
CM-2 2022-05-20

Source: provided

நீலகிரி : உதகையில் மலர் கண்காட்சியை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது வெலிங்டன் ராணுவத்தின் பேண்ட் வாத்தியக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களை நோக்கி வந்ததும், நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற பாடலை வாசிக்க முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி அதனை வெகுவாக ரசித்தனர். 

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மனைவி துர்காவும் உடனிருந்தார். மலர்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்களைப் பார்வையிட்ட அவர், தோடர், கோத்தர் மற்றும் ஓடிசி கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்தார்.

பின்னர் பூங்காவின் பிரசித்தி பெற்ற இத்தாலியன் பூங்காவுக்கு அவரும், அவரது மனைவி துர்காவும் சென்றனர். அங்கு உள்ள பிரசித்தி பெற்ற பேண்ட் ஸ்டாண்டில், வெலிங்டன் ராணுவத்தின் பேண்ட் இசைக்குழு பிரத்யேகமாக இசையை இசைத்தனர். அவர்களின் பேண்ட் வாத்திய இசையை அங்குள்ள காட்சி கோபுரத்தில் முதல்வர் கண்டு ரசித்தார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழே இறங்கி பேண்ட் வாத்தியக் குழுவினர் அருகில் வந்ததும், பேண்ட் வாத்திய குழுவினர், 'நீங்கள் நல்ல இருக்கணும் நாடு முன்னேற' பாடலை டைமிங்கில் இசைக்க புன்னகை பூத்தார்.

அவரது மனைவி துர்கா அதை வெகுவாக ரசித்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்ட முதல்வரை நோக்கி சுற்றுலாப் பயணிகள் ஆரவாரம் செய்ய, அவர்களை நோக்கி கை அசைத்தும், வணக்கம் தெரிவித்தார். மேலும், அங்கிருந்த சிலரிடம் மனுக்களை பெற்றதோடு, கை குலுக்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து