முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய வீடியோக்களை கூட எச்.டி தரத்தில் பார்க்கலாம் : யூடியூப்பில் விரைவில் புதிய வசதி

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      உலகம்
YouTube 2024-03-27

Source: provided

வாஷிங்டன் : பழைய வீடியோக்களை கூட எச்.டி. தரத்தில் பார்க்க யூடியூப்பில் சூப்பர் அப்டேட் கொண்டுவந்துள்ளது.

ஸ்மார்ட்போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக யூடியூப் செயலி உள்ளது. வீடியோக்களை பார்க்கவும் பதிவேற்றம் செய்யவும் பயன்படும் இந்த யூடியூப் ஆதிக்கம் வந்த பிறகு பலரும் டிவி பார்ப்பதையே மறந்துவிட்டனர் என சொல்லும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. யூடியூப்பிற்கு போட்டியாக பல வீடியோ தளங்கள் அறிமுகமானாலும், யூடியூப் இணைய உலகில் தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி வருகிறது. பயனர்களின் வசதியை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதிய அப்டேட்களை யூடியூப் வழங்கி வருகிறது. அந்த வகையில், யூடியூப் தற்போது சூப்பர் அப்டேட் ஒன்றை கொண்டு வர இருக்கிறது.

அதாவது, யூடியூப்பில் உள்ள பழைய லோ குவாலிட்டி (வீடியோ தரம் குறைந்த) வீடியோக்களை ஏஐ மூலமாக ஆட்டோமேட்டிக்காக உயர்தர வீடியோக்களாக மாற்றிக்கொள்ளும் வசதியை யூடியூப் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதியவசதி மூலம், 1080பி என்ற தரத்துக்குக் குறைவாக பதிவிடப்பட்டுள்ள பழைய வீடியோக்கள் மற்றும் இனிமேல் பதிவிடவுள்ள புதிய வீடியோக்கள் போன்றவற்றை ஏஐ மூலமாக தரம் உயர்த்த யூடியூப் முடிவு செய்துள்ளது.

4 கே, எச்.டி. மற்றும் அல்ட்ரா எச்.டி. வரைக்கும் ஏஐ மூலமாக வீடியோக்களின் தரத்தை உயர்த்த யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. செட்டிங்ஸ் பகுதியில் உள்ள ‘சூப்பர் ரெசல்யூஷன்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஒப்புதல் தெரிவித்தால், யூடியூப்பே வீடியோக்களை தானாக தரம் உயர்த்திக் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து