முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
Gun 2023 04 17

Source: provided

சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் திங்கள்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த பெரியம்மா (75), பாவாயியின் (70) சடலங்கள் மீட்கப்பட்டன. அவா்கள் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.

இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்ட எஸ்பி (பொ) விமலா உத்தரவின்பேரில் சேலம் காவல் துணை கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (மகுடஞ்சாவடி), ரமேஷ் (சங்ககிரி), சண்முகம் (தம்மம்பட்டி) ஆகியோரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலையில் தொடா்பு உள்ளதாக சந்தேகிக்கும் கருப்பூா், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவரைத் தேடிவருகின்றனா். மேலும், இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே.கே.நகா் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர் .

இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை பகுதியில் குற்றவாளி அய்யனார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் அழகு முத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளி பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது குற்றவாளி அய்யனார் உதவி ஆய்வாளர் கண்ணன் வலது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் குற்றவாளி அய்யனாரின் வலது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதையடுத்து அய்யனாரை மீட்ட போலீசார் அவரை உடனடியாக சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். பின்னர், அய்யனார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதவி ஆய்வாளர் கண்ணனிடம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விமலா மற்றும் சங்ககிரி உதவி கண்காணிப்பாளர் தனசேகர் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து