முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுன் ரூ.38,120-க்கு விற்பனை..!

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      தமிழகம்
jewelery-2022-06-23

Source: provided

சென்னை ; தங்கம் விலை நேற்றும் உயர்ந்து பவுன் ஒன்று ரூ. 160 உயர்ந்து ரு.38,120-க்கு விற்பனையானது.

உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர்.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் தங்கத்தில் இருந்த முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை சரிவு கண்டது. இந்தநிலையில் தங்கம் விலை நே்றும் ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.4765-க்கு விற்பனையானது.

பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38120-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41312-க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.66.00-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.66,000 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து