முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
students-2022 06 30

அரசுப் பள்ளியில் படித்து, பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்து, சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டம், தொழிற்கல்வி ஆகியன படிக்கும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.   அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று இருக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியாா் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று அதன்பின்பு 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இந்த நிதியுதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.  மாத உதவித் தொகை பெறும் திட்டத்துக்கென https://penkalvi.tn.gov.in/ என்ற புதிய இணையதளம்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் நிறைவு பெற்ற நிலையில் ஜூலை 10-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து