முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் பெரியபாளையம், பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு பெரியபாளையம்,

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
sekar-babu-2022 06 30

Source: provided

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் கோவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித்தொகை கோவில் திருப்பணி மற்றும் வளர்ச்சிப்பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் பெரிய பாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் பக்தர்களால் காணிக்கையாக கிடைத்ததில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த தங்கத்தை வங்கியில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ 512 கிராம் தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய ஒப்படைத்தார். 

அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:- பெரிய பாளையம்கோவிலில் உள்ள தங்க நகைகளை முதலீடு செய்ததன் மூலம் மாதமொன்றுக்கு ரூபாய் ஒரு கோடி வட்டி கிடைக்கும். 18 மாதங்களில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்பட 3 கோவில்களில் தங்கத்தேர் செய்து முடிக்கப்படும். சிறுவாபுரி முருகன் கோவிலில் நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து