முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்கா

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
yesvath-sinka--2022 06 30

Source: provided

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர்  யஷ்வந்த் சின்கா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, பா.ஜனதா இல்லாத பிற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார். அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா நேற்று சென்னை வந்தார். 

கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்த அவர், மாலையில் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் அங்கு கூடியிருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு கோரினார். 

இந்நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்கா பேசுகையில், மதச்சார்பின்மையை காக்கவே இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தன்னை தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகளின் நான்காவது விருப்பமாகவே தன் பெயர் இருந்தாக குறிப்பிட்டார். 'இந்த தேர்தலில் வெற்றி-தோல்வியைத் தாண்டி நாட்டு மக்களின் ஆசியை பெறுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி. கூட்டாட்சி தத்துவம் வெற்றி பெற தொடர்ந்து பாடுபடுவேன். நாடாளுமன்றம் விதிகளை பின்பற்றி நடப்பதை உறுதி செய்வேன்' என்றும் சின்கா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து