முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு: தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

மும்பை : தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக வர்த்தகத்தை தடை செய்துள்ளன. இதனால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 79 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் பொருட்டு தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தங்கம் இறக்குமதி வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த வரி உயர்வானது ஜூன் 30-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கவரியுடன் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியான 2.5 சதவீதமும் இணைந்து கொண்டால், தங்கத்தின் சுங்க வரியானது 15 சதவீதமாக இருக்கும். கடந்த பட்ஜெட்டில் தங்கம் விலை 7.5 சதவீதம் குறைத்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் போது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அழுத்தம் அதிகரிக்கிறது. அதனை சரி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து