முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருக்கலைப்பு செய்யும் அமெரிக்க பெண்கள் மீது கைது நடவடிக்கை : அதிபர் ஜோ பைடன் பேச்சு

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      உலகம்
Joe-Biden 2022 02 19

Source: provided

வாஷிங்டன் : கருக்கலைப்பு செய்து கொள்ளும் அமெரிக்க பெண்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு  ரத்து செய்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. 

அதே போல், அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில் பிற நாடுகளுக்கு சென்று கருக்கலைப்பு செய்து கொள்ளும் அமெரிக்க பெண்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி மாநில கவர்னர்களுடன் கருக்கலைப்பு உரிமைகள் குறித்த மெய்நிகர் ஆலோசனையில் கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் பேசுகையில், 

கைது போன்ற நடவடிக்கைகளை மக்கள் நம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது நடக்கும், மேலும் இது ஒரு பெரிய ஒப்பந்தம் என்று முழு நாட்டிற்கும் அரசாணை அனுப்ப போகிறோம். கருக்கலைப்பு செய்ய மாநில எல்லைகளை கடக்க வேண்டிய பெண்களைப் பாதுகாக்கவும், தடை செய்யப்பட்ட மாநிலங்களில் மருந்துகளை பெறுவதற்கு அணுகுவதை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து செயல்படும் என்று ஜோ பைடன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!