முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த மக்கள்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      உலகம்
Libya 2022 07 02

Source: provided

டாப்ரக் : லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை சூறையாடினர். 

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை சூறையாடினர். கடாபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து