Idhayam Matrimony

இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      விளையாட்டு
Indian-team 2022 07 05

Source: provided

பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.

5 நாட்கள்...

கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. நேற்று நடந்த கடைசி நாள் போட்டியில் 378 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்தி இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-2 தொடர் சமனில் முடிந்ததால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்கள் இந்த தோல்வியினால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

டெஸ்ட் புள்ளிகள்...

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து மெதுவாக ஓவர் வீசியதற்காக இந்திய வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை இந்திய அணி இழக்கும் என்றும் ஐசிசி கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து