முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்டரி விமர்சனம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Battery-review 2022 07-31

Source: provided

சென்னை நகரில் மர்மக் கொலைகள் நடக்கிறது. கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல்துறை அதிகாரியான யோக்ஜேபியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே நாளில், காவல்துறை உதவி ஆய்வாளர் பணியில் சேருகிறார் நாயகன் செங்குட்டுவன். யோக்ஜேபி குழுவில் இணைந்து அக்கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடைபெறுகிறது. அது நடக்கும்போதே மேலும் சில கொலைகள். அவை எப்படி நடக்கின்றன? அவற்றைச் செய்வது யார்? எதற்காகச் செய்கிறார்கள்? என்பதை விவரிப்பதே பேட்டரி படம். நாயகன் செங்குட்டுவன் காதல் காட்சிகள் சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் மிளிருகிறார். நாயகியாக வரும் அம்முஅபிராமிக்கு பெரிதாக வேலை இல்லையென்றாலும் கவனம் ஈர்க்கிறார். தீபக், எம்.எஸ்.பாஸ்கர், அபிஷேக், நாகேந்திர பிரசாத் ஆகியோர் சிறப்பாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். வெங்கடேஷின் ஒளிப்பதிவு,சித்தார்த்விபின் இசை, எடிட்டிங் என அனைத்துமே கச்சிதம். மனசாட்சியில்லாமல் உயிர்காக்கும் மருத்துவக் கருவியில் ஊழல் செய்யும் செல்வந்தர்கள். அதனால், சாமானிய குடும்பங்கள் எவ்வளவு பாதிப்புக்கு ஆளாகின்றன என்பதை உணர்வுப்பூர்வமாகவும் சமூக அக்கறையுடனும்  சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிபாரதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!