முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் பேட்மிண்டன்: இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
srikanth- 2022 08 04

Source: provided

பர்மிங்காம்: காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர்.

ஒற்றையர் ஆட்டம்...

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின.

கிடாம்பி ஸ்ரீகாந்த்... 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உகாண்டாவை சேர்ந்த டேனியல் வனாகலியா உடன் மோதினார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் இந்த போட்டியில் 21-9, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பி.வி.சிந்து வெற்றி...

இதேபோல நேற்றஉ நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் பதக்க நம்பிக்கை பி.வி. சிந்து மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் நபாஹா உடன் மோதினார். இந்த போட்டியில் சிந்து 21-4, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து