முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம்: கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்யும் : பினராய் விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 02 23

Source: provided

சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதி இருந்தார். அதில், முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, 

முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து