முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்கா காந்திக்கு 2-வது முறை கொரோனா தொற்று : தனிமைப்படுத்திக்கொண்டார்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
Priyanka 2022-08-10

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 3ஆம் தேதி அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் 2 மாதங்கள் இடைவெளியில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், மீண்டும் கொரோனா தொற்று (நேற்று) உறுதியாகியுள்ளாது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த முறை மிதமான அறிகுறிகளே இருப்பதாக பிரியங்கா காந்தி கூறியிருந்தார். தற்போது தொற்றின் நிலவரம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாக மட்டுமே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 2ஆம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. மறுநாளே பிரியங்கா காந்தி தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் சோனியா காந்தி ஒரு மாதத்திற்குப் பின்னர் அண்மையில் தான் விசாரணைக்கு ஆஜராகினார்.

கடைசியாக விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்திய பேரணியில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அந்தப் பேரணியின் போது அவர் வலுக்காட்டாயமாக கைது செய்யப்பட்டார். பேரணி முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் பிரியங்கா காந்திக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து