முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
modi-2022 07 15

Source: provided

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்து சென்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து இந்தியா பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. 

இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று விருந்தளிக்க உள்ளார். பிரதமர் மோடி இன்று காலை 11:00 மணிக்கு பதக்கம் வென்ற வீரர்களை சந்திக்கிறார். குறிப்பாக காமன்வெல்த் குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவுடன் பேட்டியளித்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரின் பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் தனது குத்துச்சண்டை கையுறையில் பிரதமரிடம் "ஆட்டோகிராப்" வாங்குவேன் என நிகாத் சரின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

_____________

இனவெறி சர்ச்சை : நியூசி. வீரர் டெய்லர் பரபரப்பு குற்றச்சாட்டு

பொதுவாக நிறைய நட்சத்திர விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் தங்களது வாழ்க்கையை பற்றிய சுய சரிதையை புத்தகமாக வெளியிடுவார்கள். அந்த வகையில் நியூசிலாந்தின் ஜாம்பவானான டெய்லர் ப்ளாக் & வைட் என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை  வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நிகழ்வில் பேசிய அவர் நியூசிலாந்துக்காக விளையாடும் போது பெரும்பாலும் வெள்ளை வீரர்களைக் கொண்ட தனது அணியில் தாம் மட்டும் மாநிறத்தை கொண்டவராக விளையாடியதால் நிறைய தருணங்களில் கிண்டல்களுக்கு உள்ளானதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளையாக இருப்பவர்களுக்கான விளையாட்டாகும். எனது வாழ்நாளில் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் வெண்ணிலாவை போன்ற வெள்ளை நிற வரிசையில் ஒரு மாநிறம் நிறைந்த பழுப்புநிற முகமாக இருந்ததால் பல சவால்கள் இருந்தன. பல தருணங்களில் எங்களது உடைமாற்றும் அறையில் அந்த நிகழ்வு அரகேறியுள்ளது என்றார்.

_____________

கோவா அணிக்கு மாறுகிறார் அர்ஜூன் டெண்டுல்கர்

22 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கருக்கு 2020-21 சீசனில் சையது முஸ்டாக் அலி தொடரில் ஹரியாணா, புதுச்சேரி அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் உள்ளூர் போட்டிகளின் அடுத்த சீசனில் மும்பையில் இருந்து விலகி கோவா அணியில் இணைய அர்ஜூன் டெண்டுல்கர் முடிவு செய்துள்ளார். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திடம் விண்ணப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அர்ஜூன் தனது கேரியரின் இந்த தருணத்தில் மைதானத்தில் அதிகபட்ச ஆட்ட நேரத்தைப் பெறுவது முக்கியம். இந்த அணி மாற்றம் அர்ஜூன் அதிக போட்டிகளில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை தொடங்குகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

_____________

கனடா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சானியா ஜோடி 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

இதில் நடந்த முதல்சுற்றில் சானியா- மேடிசன் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் இந்திய-அமெரிக்க ஜோடி, ரஷியாவின் முன்னணி வீராங்கனைகள் வெரோனிகா குடெர்மெடோவா மற்றும் எலிஸ் மெர்டென்சை இன்று எதிர்கொண்டனர். இந்த போட்டியில் சானியா- மேடிசன் ஜோடி 3-6, 6-4, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து