முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப். 30-ல் வெளியாகும் நானே வருவேன்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      சினிமா
Dhanush 2022 09 18

Source: provided

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தை கலைபுலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ், அண்ணன் - தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணன் நல்லவராகவும், தம்பி பழிவாங்குபவராகவும் வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அதேபோல் இயக்குநர் செல்வராகவன் நானே வருவேன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் படத்துடன் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பே வெளியிடலாமா எனவும் படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் பெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து தற்போது நானே வருவேன் படம் பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து